காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.