வவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 6ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு. எஸ்.தயாளன் அவர்களது தலைமையில் 26.11.2016 (சனிக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான திரு ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் திரு கே.மஸ்தான் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி. பா.காமலேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். கௌரவ அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் மாவட்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு இ. நித்தியானந்தன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு யோ.கென்னடி, சமாதான நீதவான் திரு. எம்.அமிர்தலிங்கம், முன்னாள் கிராம சேவையாளர் திரு ரி.பாலசுப்ரமணியம் மற்றும் கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் திரு எ.ஆர்.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.