fidal-castroகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 07 மணிக்கு தனது 90ஆவது வயதில் காலமானார்.

1920ம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார். 1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்து பின்னர் 1976ம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ பெப்ரவரி 24. 2008ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார். கடந்த 2008ஆம் ஆண்டு ஆட்சியை தனது சகோதரனான ராவுல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு பெற்றார். அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஃபிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு காரணமாக இன்று இயற்கை மரணம் அடைந்தார்.

கியூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், பிடல் கெஸ்ட்ரோ ஆவார். அமெரிக்க கண்டத்தில் கம்யூனிச ஆட்சி நடைபெறும் ஒரே நாடு கியூபாவாகும்.