norwayநோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், துப்பரவு தொழில் செய்யும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடுமையாக உழைத்து முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த நபர் 6 பேருடன் இணைந்து நோர்வேயில் வாழும் இலங்கை தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி சுமார் 160 – 200 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மோசடி செய்த தொகை இதனை விட பலமடங்கு இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மோசடியுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காண்பது கடினமான காரியம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தலைநகர் ஒஸ்லோவிற்கு அருகில் துப்பரவு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இலங்கை தமிழ் ஒருவரின் ஆண்டு வருமா னம் குறித்து 2014ஆம் ஆண்டு வருமான வரி திணைக்களத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையர் சிலரின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட அந்நாட்டு பொலிஸார் கடந்த 2 ஆண்டுகளாக கண்காணித்து வந்துள்ளனர். இவர்களை கண்காணித்து வந்ததில் முக்கிய 6 நபர்கள் மற்றும் பல தமிழர்களின் பெயரில் இவ்வாறு மோசடிகளை செய்து சொகு சாக வாழ்வதும், இதன் பின்னால் உள்ள மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, சில தமிழ் இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் விரும்பியோ விரும்பாமலோ குறித்த நிறுவனங்களில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முக்கிய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் விசாரணை களை எதிர்நோக்கியுள்ளனர் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவத்தையடுத்து சுமார் 7 இளைஞர்கள் தற்காலிக வேலை அனுமதியை இழந்துள்ளதுடன், புகலிடக்கோரி க்கை ஏற்றுக்கொள்ளப்படும் முன் இந்த மோசடி நிறுவனங்களில் வேலைசெய்த பலரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.