Header image alt text

vad-01இன்றைய தினம் எமது புலம் பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த சங்கீதா அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக இரண்டு மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக  துவிசக்கர வண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.

மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் துவிசக்கரவண்டிகள் இல்லாது சிரமப்படுவதாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மேற்படி Read more

sdfd“காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாகவுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. Read more

jailபோலி முகப்புத்தகத்தின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

mahindaஇலங்கையில் தற்போதுள்ள மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டிற்குள் கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்றத்திற்குள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்த போதிலும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராயும்போது எதிர்காலத்தில் மாற்றத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more

2hயாழ். நல்லூர் ஸ்ரீநடராஜ பரமேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஐயப்பனின் மகரஜோதி மண்டல பூஜை 27.12.2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00மணியளவில் நடைபெற்றது. இதன்போது தும்பளை கிழக்கு ரிதம்ஸ் குழுவினரின் தயாரிப்பில் உருவான சபரிச அரிகர சுதன் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆசியுரையினை குருசாமி கரிகரன் சிவாச்சாரியார் அவர்கள் வழங்கினார். திரு.கே.கேதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

swaminathanயுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச்மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 4600ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்பது குறித்து தற்போது வரை பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

jailபேஸ்புக் வலைத்தலத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பதிவு பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது கட்டாரில் இருந்து எனவும், மேலும் சில நாடுகளில் இருந்தும் சில நபர்கள் சம்பந்தப்பட்ட பதிவினை பேஸ்புக்கில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

kachchativeவருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்துள்ளார்.

சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை, இந்திய பக்தர்கள் வருவது வழமை. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. Read more

sasikalaஅண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதற்கு கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து இணக்கம் தெரிவித்தனர். சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியளிப்பதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானத்தை கண்ணீர் மல்க ஏற்றுக் கொண்ட சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளாரென ஓ.பன்னீர் செல்வம் ஊடகத்தினரிடம தெரிவித்துள்ளார். Read more

vimalதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இன்றுகாலை 10.00 மணியளவில் அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவங்ச பதவி வகித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை தமது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். Read more