யாழ். புத்தூர் புத்தகலட்டி ஸ்ரீ விஸ்ணு வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திரு. க.செந்தில்வடிவேல் அவர்களின் தலைமையில் இன்று(01.12.2016) வியாழக்கிழமை காலை 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.சிவநேசன் (கோட்டக் கல்விப்பணிப்பாளர் கோப்பாய் கோட்டம்), திரு. அ.பரஞ்சோதி (பழைய மாணவர், மாகாணசபை உறுப்பினர்) ஆகியோரும், கௌரவ விருந்தினராக திரு. பா.பாலகுமார் (நலன் விரும்பி டென்மார்க்) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து தலைவர் உரை மற்றும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து திருமதி மீனா சித்தார்த்தன் அவர்கள் உட்பட விருந்தினர்கள் மாணவ, மாணவியர்க்கு பரிசில்களை வழங்கிவைத்தனர். இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவடைந்தன.