யாழ். வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தின விழாவும் பாடசாலையில் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ அருணாசல சாஸ்திரிகள் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ந.இரவீந்திரன் அவர்களது தலைமையில் நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. சந்திரராசா (வலயக் கல்விப்பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. சா.அருள்ஞானானந்தன் (கிராமசேவை அலுவலர், வடலியடைப்பு) அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more