1984ஆம் ஆண்டு மார்கழி 02ஆம் திகதி அதிகாலை 5மணியளவில் வவுனியா சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 32ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு
நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை சேமமடு முதலாம்படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.