மாங்குளம்-மால்லாவி வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பில் வசிக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைதத்துவக் குடும்பங்களிற்கு முழுமையாகக் தமது வாழ்வாதார மேம்பாடு சிறப்பதற்காக நல்லின ஆடுகளும், வீட்டிற்கொரு மரவளர்ப்பு திட்டமும், அதுசார்ந்த தொழில் நுட்ப கருவிகளும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களின் முயற்சியாலும், செயல்பாடாலும் கடந்த 30.11.2016 அன்று வழங்கிவைப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் மாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமகாணசபை பிரதிஅவைதலைவர், கால்நடை அபிவிருத்தி திணைக்கள மாகாண பிரதி பணிப்பாளர், நீர்பாசன பிரதி மாகாண பணிப்பாளர், கால்நடை வைத்தியர்கள், துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து சிறப்பித்து பயனாளிகட்கு வழிகாட்டலை மேற்கொண்டிருந்தனர்.