dsc_1529புதிய அரசியல் யாப்பில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளும் அபிலாஷைகளும் எந்தக் காலத்திலும் பாதிக்கப்படாத, எஞ்ஞான்றும் நீக்கப்பட முடியாத வகையில் எந்தவகையிலும் எதிர்காலத்தில் மாற்றமுடியாத சரத்தாக (Entrenched clause) சோல்பரி அரசியலமைப்பில் சரத்து 29ஊ க்கு ஒப்பான ஈடான, வலுவான சரத்து அமைய வேண்டும்.

மேலும் மொழிச்சமத்துவமும் மொழிப்பயன்பாடும் மொழி உரிமையை வலியுறுத்தும் வகையில் சரத்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய பணிக்குழு வலியுறுத்துகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாதுரை விநாயகமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேற்படி ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய பணிக்குழு செயளாலர் நாயகம் மேல் மாகாணசபை உறுப்பினர் டாக்டர் நல்லையா குமரகுருபரனும் உடனிருந்தார். எந்தளவு தூரம் நல்லிணக்க அமைச்சினால் தமிழ் மொழி அமுலாக்கத்திற்கு ஊக்கமளிக்கப்படுகின்றது என்பது தெரியவில்லை.

ஆனால் புதிய அரசியல் யாப்பில் மொழிச்சமத்துவமும் மொழிப்பயன்பாடும் மொழி உரிமையை வலியுறுத்தும் வகையில் சரத்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய பணிக்குழு வலியுறுத்துகிறது

இந்தவருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்க கூடிய தீர்வு புதிய அரசியல் யாப்பினூடாக கிட்டவில்லையானால் அது நம் தமிழர் தெரிவுசெய்த சமகால தமிழ் தலைமையின் சாணக்கியத்திற்கு ஏற்ப்ட்ட தோல்வியாகவே அமையும் எனவும் மேற்படி சந்திப்பில் செயளாலர் நாயகம் டாக்டர் நல்லையா குமரகுருபரன தெரிவித்தார்.

சமஷ்டி முறைமையை சிங்கள பெரும்பான்மை சமுகம் ஒருபொழுதும் அனுமதிக்க போவதில்லை. எனவே இறுதிக்கட்டத்தில் எல்லாவற்றையும் கோட்டைவிட்டு விடமுடியாது ஆதலினால் அடிப்படை பிரச்சனையையம் வலியுறுத்தி வெற்றிகாண வேண்டும். பெருந்தலைவர் சா.ஜெ.வே செல்வநாயகம் அவர்களே தான் தோல்விகண்டுவிட்டேன் அஹிம்சை போராட்டம் தோல்வி கண்டுவிட்டது என வட்டக்கோட்டை மாநாட்டின் வாயிலாக அறை கூவினார். எனவே இன்றும் இணக்க புரிந்துணர்வு அரசியலூடாக சம்பந்தர் அவர்கள் சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு, உள்ளிட்ட பலவற்றை அடையமுடியும் என நம்பலாம். ஆனால் இறுதிக்கட்டத்தில் எல்லாவற்றையும் கோட்டைவிட்டு விடமுடியாது.

ஆதலினால் அடிப்படை பிரச்சனையை கண்டிப்பாக வலியுறுத்தி பெற்றாக வேண்டும். மாவை சேனாதிராஜா அவர்கள் அண்மையில் தனது பாராளுமன்ற பேச்சில் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். அது வரவேற்றபிறற்குரியது. தான் சார்ந்த தமிழ் மக்களுக்கு மனசாட்சிப்படி உண்மையை கூறியிருக்கின்றார்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அவர்கள் கடந்த காலங்களில் கூறியதுபோல் இந்தவருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்ககூடிய தீர்வு அரசியல் யாப்பினூடாக கிட்டவில்லையானால் அது நம் தமிழர் தெரிவுசெய்த சமகால தமிழ் தலைமையின் சாணக்கிய தோல்வியாகவே அமையும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அப்பாதுரை விநாயகமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேற்படி ஊடகசந்திப்பில் செயளாலர் நாயகம் மேல் மாகாணசபை உறுப்பினர் டாக்டர் நல்லையா குமரகுருபரனும் உடனிருந்தார்.