Header image alt text

sfdfசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியானது காலை 10.30 அளவில் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி இலங்கை செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

இந்த பேரணியை அன்பிற்கும், நட்பிற்கும் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாராபட்சமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர். Read more

nadaநடா புயலின் தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் 3 மரணம் உட்பட 325 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி வங்கக்கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடா புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சாவகச்சேரியில் மரம் முறிந்து விழுந்து ஒருவரும், குருநகரில் கடலுக்கு சென்ற இரு மீனவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். Read more

afkhanஆப்கானிஸ்தானில் இருந்து வருகைதந்த குழுவினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் 10 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், சென்ரபோ கியூமன் கேரியன் பியார்ஸ் என்ற நிறுவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களின் பிரநிதி களாக இன்று வருகை தந்திருந்தனர். அவர்கள் மிக முக்கியமாக எமது மாவட்டத்தில் நடைபெறும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் மக்களின் பங்களிப்பு தொடர்பாகவும் இங்கிருக்கும் சுகாதாரம் கல்வி போன்ற வசதிகளை அறிவதற்காகவும் வருகை தந்திருந்தனர். Read more

basilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை வாபஸ் பெறப்பட்டதை அடுத்தே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க முன்னிலையில் இந்த விடயம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more

fsஅமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு இன்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி சுமணரத்ன தேரர் தனது தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார். இதனால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. Read more

dfdfdfதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 68. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்” என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22-ஆம் திகதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. Read more