சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியானது காலை 10.30 அளவில் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி இலங்கை செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
இந்த பேரணியை அன்பிற்கும், நட்பிற்கும் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாராபட்சமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர். அத்துடன், இளைஞர்களைத் தெளிவுபடுத்தும் முகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க காரியாலயத்திற்கு முன்பாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.