Header image alt text

D.Sithadthanஇந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம்.

சோ ராமசாமி அவர்களும் இந்திய அரசியலிலே மிகப்பெரிய செல்வாக்கினைச் செலுத்தி வந்துள்ளதோடு, ஒரு மூத்த பத்திரிகையாளராக, நடிகராக. அரசியல் ஞானியாக அவர் திகழ்ந்து வந்திருக்கின்றார்.

இவர் அநேகமான இலங்கைத் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் நட்புறவைக் கொண்டிருந்தார். இதனடிப்படையில் அவருடன் எனக்கும் மிக நீண்டகாலமான ஒரு நட்புறவு இருந்தது.
Read more

maithripala_sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ம் திகதி மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்கும் அவர், மலேஷியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் இதன்போது சுற்றுலா தொழிற்துறை, பயிற்சி பரிசோதனை, அரச நிர்வாகத்துறை உட்பட 6 உடன்படிக்கைகளும் மலேசிய அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

d-sithadthan-m-pதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய மறைவு எம் அனைவருக்கும் மிகுந்த துயரையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண் ஆதிக்க அரசியலில் அவர் ஒரு பெண்ணாக துணிச்சலுடனும், நேர்மையுடனும் செயற்பட்டு இன்று தனக்கென்று ஒரு முத்திரையை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல இந்தியா முழுவதிலும் பதித்துள்ளார்.

1984களில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரை நான் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கதைத்தபோது, எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் அவர் மிக யதார்த்தமாக என்னுடன் கதைத்திருந்தார். Read more

ssபாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், Pமு661 என்ற பயணிகள் விமானம், இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

sampurசம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை துறைமுகத்திலிருந்து அனல் மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அனல் மின் நிலையத்தேவைக்கு

கடல் நீரைக் கொண்டு செல்லவும் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் வாழ்ந்துவரும் மக்களை வெளியேறுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

sddsdsdsகாலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த, கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதன் நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக நிஷாந்த முத்துஹெட்டிகம சுட்டிக்காட்டியுள்ளார்.

மதங்களுக்கிடையே ஒற்றுமைய ஏற்படுத்தல் மற்றும் சமாதானத்தை நிலை நாட்டுதல். கின்னஸ் சாதனை படைத்து இந்நாட்டின் புகழை ஓங்கச் செய்தல் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சமூக சேவை ஆகிய ஐந்து காரணங்களைக் கொண்டே மேற்படி கிருஸ்மஸ்மரம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

ilancheliyanயாழ். ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரையின்போது 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், மன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் சாட்சியமளித்திருந்தனர். கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை நாரந்தனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தபோது அவர்கள்மீது தாக்குதல் மேற்கொண்ட ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களான நெப்போலியன் என அழைக்கப்படும் ரமேஸ், மதன் என அழைக்கப்படும் மதனராசா மற்றும் அன்ரன் ஜீவராஜா ஆகிய மூவரும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டனர். Read more

jayampathyதனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்றம் கூடிய வேளை, சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தனக்கு தொலைபேசி மூலம் மோசமான வார்த்தைகளால் தூற்றி, குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். Read more

so-ramasamyமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி இன்று காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

82 வயதுடைய சோ இன்று அதிகாலை 4.40 மணிக்கு உயிரிழந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார். Read more

sofitharமறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் சந்தேகத்திற்குரியது என, முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உடுவே தம்மாலோக தேரர் குறித்த முறைப்பாட்டினை முன்வைத்திருந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜெயசிங்கவின் தலைமையிலான குழுவினர், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தகவலளித்தனர். Read more