jayampathyதனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்றம் கூடிய வேளை, சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தனக்கு தொலைபேசி மூலம் மோசமான வார்த்தைகளால் தூற்றி, குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும், இது குறித்து தான் வெலிகடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் ஜெயம்பதி விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதுபற்றி பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் முன்வைப்பதோடு, பொலிஸ்மா அதிபர் ஊடாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.