காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த, கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
இதன் நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கின்னஸ் சாதனையொன்றை நிலைநாட்டும் பொருட்டே, இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.