பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், Pமு661 என்ற பயணிகள் விமானம், இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.