so-ramasamyமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி இன்று காலமானார். துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

82 வயதுடைய சோ இன்று அதிகாலை 4.40 மணிக்கு உயிரிழந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் சோ காலமானதை அவரது மருத்துவர் விஜய்சங்கர் உறுதி செய்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாட்கள் முழுமையாக முடிவதற்குள் சோ ராமசாமி உயிரிழந்துள்ளார். ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.