Header image alt text

karuna-ammanமுன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, கடந்த 29ம் திகதி நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா, பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மேலும், கடந்த ஐந்தாம் திகதி அவரது பிணை கோரிக்கை பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிணை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

christmas-treeகாலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த, கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதன் நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நிஷாந்த முத்துஹெட்டிகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கின்னஸ் சாதனையொன்றை நிலைநாட்டும் பொருட்டே, இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ranilஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, ஐதேக ஆட்சியில் இருந்தவேளை, 1981ஆம் ஆண்டு யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். Read more