வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களின் வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடை நிதிமூலம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐயன்குளம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாபு முன்பள்ளிக்கான கட்டிடம்
மாகாணசபை உறுப்பினரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ரூபா 100,000/- ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ் முன்பள்ளியின் திறப்பு விழாவில் கல்வித் திணைக்களத்தின் பிராந்திய முன்பள்ளிகளுக்கான பணிப்பாளரும் கலந்து கொண்டிருந்தார்.