sampur-peopleசம்பூரில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட அனல் மின் நிலையத்திற்கு சொந்தமான காணியில் தொடர்ந்து வசித்துவருகின்ற குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சம்பூர் மக்கள் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.

மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் காணியில் அமையவிருந்த அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி யைத் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்குக் கொண்டு செல்லவென கடற்கரைச்சேனை கிராமத்தில் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த காணிக்குள் வசித்துவந்த மூன்று குடும்பங்கள் அங்கி ருந்து வெளியேறுவதற்கு தொடர்ந்தும் மறுத்துவந்தனர். இந்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரசாங்கம் சார்பில் மூதூர் பிரதேச செயலகத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது குறித்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. சம்பூர் உத்தேச அனல் மின் நிலைய காணியில் சுமார் 98 பேரின் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. அதேபோல அந்தக் காணியில் 103 ஏக்கர் விவசாய காணிகளும் உள்ளன.

இந்த நிலையில் உத்தேச அனல் மின் நிலையக் காணிக்குச் செல்லும் பாதையில் காணப்படுகின்ற குடியி ருப்புக்களில் வாழ்ந்துவரும் 3 குடும்பங்களையே இவ்வாறு வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிரு க்கிறது. எவ்வாறாயினும் தங்களுக்கு தத்தமது சொந்தக் காணிகளே தேவை என்று தெரிவிக்கின்ற குறித்த மூன்று குடும்பங்களும், மூதூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.