இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷம்h சுவராஜ் (64 வயது) பல வாரங்களுக்குமுன், தன்னுடைய சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். சுஷ;மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததுஇந்த அறுவை சிகிச்சை நடைபெற்ற தில்லி மருத்துவமனையாது, அமைச்சருக்கு தொடர்பில்லாத பெண் ஒருவர் சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர் உயிரோடு இருப்பதாகவும் கூறியுள்ளது
ட்விட்டரில் தன்னுடைய பிரச்சினை குறித்து சுவராஜ் பதிவு போட்ட சில மணி நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், என்னால் செய்ய முடிந்தது என்று கூறி தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தருவதாக கூறியிருந்தார்.
அந்த சமயத்தில், அவருக்கும் மற்றும் இதே போன்று தங்களது சிறுநீரகங்களை கொடுக்க முன்வந்த நண்பர்களுக்கு தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.