Header image alt text

இலங்கை எழுத்தாளர் (‘முல்லைமணி’) சுப்பிரமணியம்

mullaimaniமுல்லைமணி என்ற புனைபெயரில் எழுதி வந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான சாகித்திய ரத்னா பரிசு பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணியம் (முல்லைமணி) 14.12.16 செவ்வாயன்று மாலை காலமானார்.

முல்லைமணி 1933ஆம் ஆண்டு முள்ளியவளையில் பிறந்தார். 1948ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வி கற்றார். 1951ல் இவரது முதல் சிறுகதை வீரகேசரியில் வெளிவந்தது. Read more

vakaraiஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் தங்கள் காணி உரிமையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை பிரதேச செயலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமான பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டுப் போட்டு இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக செயலகத்தின் வழமையான அலுவல்கள் ஓரிரு மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன. Read more

repoபாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய 171 முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 24ம் திகதியாகும் போது, பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1600 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச கூறினார். Read more

 ganjaமுல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி, திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று(14) அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்ததில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. Read more

maithripalaநாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார். Read more