repoபாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய 171 முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 24ம் திகதியாகும் போது, பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1600 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச கூறினார்.எவ்வாறாயினும் அவற்றில் 165 முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவின் விதிமுறைக்கு அமைவானதாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அதில் 43 முறைப்பாடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த 357 முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 36 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நிறைவு செய்யப்பட்ட 06 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் 06 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச கூறினார்.

அத்துடன் அந்த ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்த அறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுவதுடன், அதுபோன்ற அறிக்கை ஒன்று எதிர் வரும் வாரத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.