Header image alt text

20161217_184240சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் நூல் விமர்சன அரங்கும் இன்று (17.12.2016) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் அறிமுக உரையினை இதயராசன் அவர்கள் ஆற்றியதோடு, நூல் ஆய்வுரையினை லெனின் மதிவானம் மற்றும் பேராசிரியர் சித்திரலேகா ஆகியோர் வழங்கினார்கள். ருஷ்ய ஒக்டோபர் புரட்சியும் ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கமும் என்ற நூற்றாண்டு கருத்தரங்கு உரையினை நூலாசிரியர் ந.இரவீந்திரன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சபையோர் கருத்தாடல் இடம்பெற்றது. இதன்போது சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. Read more

sfdfddயாழ்ப்பாணம் சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், இன்றுபிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சுற்றுலா பயணிகள் 10பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

ethiopiaஇலங்கைக்கான தூதரகமொன்றை அடுத்த வருடம் ஜனவரியில் எத்தியோப்பியாவில் உத்தியோகபூர்வமாக திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான எத்தியோப்பிய தூதுவரும், ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத்துக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தஸநாயக்க சுமித் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவர் கொசஸானா டிலாமினி சூமாவுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இந்த தூதரகம் திறக்கபடவுள்ளது. இதன்போது ஆபிரிக்க ஒன்றிய ஆணையகத் தலைவருக்கு அழைப்பிதழ் விடுக்கப்படும் என தூதுவர் சுமித் பிரியந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எத்தியோப்பியாவில் கடந்த நவம்பர் மாதம் குடியிறுப்பாளர்களுக்கான பணியகம் ஒன்றை இலங்கை நிறுவியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

sfdfவடமாகாணத்தில் அண்மையில் நடந்த குழப்பகரமான சம்பவங்கள் எதிலும் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் மூன்று பேரை சமூகத்துடன் இணைத்தல் மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட கைத்தொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜானக ரத்நாயக்க இதனை கூறியுள்ளார். புனர்வாழ்வு பயிற்சிகள் வெற்றிகரமான முறையில் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் மீண்டும் எந்த வகையிலும் மோதல்களுடன் சம்பந்தப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். Read more