சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் நூல் விமர்சன அரங்கும் இன்று (17.12.2016) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வின் அறிமுக உரையினை இதயராசன் அவர்கள் ஆற்றியதோடு, நூல் ஆய்வுரையினை லெனின் மதிவானம் மற்றும் பேராசிரியர் சித்திரலேகா ஆகியோர் வழங்கினார்கள். ருஷ்ய ஒக்டோபர் புரட்சியும் ஒக்டோபர் 21 எழுச்சி மார்க்கமும் என்ற நூற்றாண்டு கருத்தரங்கு உரையினை நூலாசிரியர் ந.இரவீந்திரன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சபையோர் கருத்தாடல் இடம்பெற்றது. இதன்போது சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.