keppapilavuமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுள் ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதாகவும், அன்று முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடமொன்றையும் ஜனாதிபதி திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள 300 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.