Header image alt text

img-20161219-wa0002

img-20161219-wa0003 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதிகளுள் ஒருவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா மயில்வாகனம் (மல்லிகைப்பூ சந்தி திலகர்) உட்பட  இலங்கையின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மேற்படி சீன விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஒன்று…..

img_9990

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி. ர.இரஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள்கால உறுப்பினருமான திரு மா.கதிர்காமராஜா(புஸ்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு.முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி(சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள். Read more

img_9902இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் பொதுத் தேர்தல் நாடளாவிய ரீதியில் நேற்று 18.12.2016 நடைபெற்றது. இவ் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சார்பில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழகத்தின் செயலாளர் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அமைக்கப்பட்ட 5 தேர்தல் மத்திய நிலையங்களில், வவுனியா பிரதேச செயலகத்தில் 167 வாக்குகளும், கோவில்குளம் இந்துக்கல்லூரியில் 133 வாக்குகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 65 வாக்குகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் 17 வாக்குகளும், செட்டிகுள பிரதேச செயலகத்தில் 8 வாக்குகளும் பெற்று மொத்தமாக 390 வாக்குகளுடன் வவுனியா இளைஞர்களின் குரலாக ஸ்ரீகரன் கேசவன் நான்காவது பாராளுமன்றம் செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

g3எமது புலம்பெயர் உறவுகளான துசாந்தினி கணாதீபன் மற்றும் நிசாந்தினி தினேஸ் ஆகியோரால் தனது தந்தையான அமரர் சிவகனேசன் கந்தையா அவர்களின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று பாரதி இல்ல சிறார்களுக்கு 42000ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளர்கள்.

எதிர்வரும் 3ம் திகதி பாடசாலைகள் தொடங்கவுள்ள நிலையில் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் போதாமையாக உள்ளது என்று பாரதி இல்ல நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் புலம்பெயர் உறவுகளால் 42000 ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.  (வட்டு. இந்து வாலிபர் சங்கம்) Read more

yyமீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாரிய ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்றுகாலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்றுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more