hஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெங்காதரன் ஞானசக்தியின் புதல்வன் நிதுஜன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்க்கு சமையல் பாத்திரங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.

நீண்டகாலமாக பாரதி இல்ல சமையல் கூடத்திற்க்கு தேவையான பாத்திரங்கள் போதாமையாக இருந்து வந்துள்ள குறையின் பெரும் பகுதியை இன்று தங்களது புதல்வனின் நிதுயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது பெற்றோர்களால் தீர்த்து வைக்கபட்டுள்ளதையிட்டி நிதுயனுக்கும் அவர்களின் பெற்றோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிதுயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

h1 h2