Header image alt text

p1400523யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது சமய ஆச்சாரப்படி நிகழ்வுகள் ஆரம்பமாகி பதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

p1400630கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் மணிமேகலைப் பிரசுரத்தின் தமிழ்வாணன் நூல்கள் 23 வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ரவி தமிழ்வாணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர், தமிழகம் மற்றும் குவைத் ஆகிய இடங்களிலிருந்து பல அறிஞர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌர தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் கவிஞர் கண்ணதாசனின் புதல்வி விசாலி கண்ணதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

maheshini-colonneவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஷேடமாக ரஷ்யத் தூதுவர் கொலை செய்யப்பட்ட பின்னர் இது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷனி கொலென்னே சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் அவருக்கு விஷேட பாதுகாப்பு பெற்றுக் கொடுக்குமாறு அந்த நாட்டுக்கு தெரியப்படுத்தியதற்கமைய தற்போது அது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

japan-lankaகடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான்-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா இலங்கை வந்துள்ளார். நேற்று பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பிராந்திய நிலைமைகள், பாதுகாப்புக் கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. Read more

ambulance-driversவட மத்திய மாகாண அம்பியூலன்ஸ் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன் தங்களிள் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி நேற்று மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் செயற்படுவதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த பண்டார குறிப்பிட்டுள்ளார். Read more

oilஇலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக இணைந்து திருகோணமலை எண்ணெய்க் குதங்ளை இந்திய அரசுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை கைவிடும்படி அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை பெற்றோலிய தொழிலாளிகள் சங்கம் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கம் இன்னமும் கையொப்பமிட்டு அந்த ஒப்பந்தத்தை செல்லுபடியானதாக்கவில்லை. Read more