கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் மணிமேகலைப் பிரசுரத்தின் தமிழ்வாணன் நூல்கள் 23 வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ரவி தமிழ்வாணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர், தமிழகம் மற்றும் குவைத் ஆகிய இடங்களிலிருந்து பல அறிஞர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌர தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் கவிஞர் கண்ணதாசனின் புதல்வி விசாலி கண்ணதாசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.