oilஇலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக இணைந்து திருகோணமலை எண்ணெய்க் குதங்ளை இந்திய அரசுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை கைவிடும்படி அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை பெற்றோலிய தொழிலாளிகள் சங்கம் நேற்று விடுத்த அறிக்கையொன்றில் எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கம் இன்னமும் கையொப்பமிட்டு அந்த ஒப்பந்தத்தை செல்லுபடியானதாக்கவில்லை.எனவே தற்போதைய நிலையில் அரசின் கைகளில்தான் குதங்கள் இருக்கின்றன. இலங்கையிடம் போதுமான அளவு களஞ்சியப்படுத்தும் வசதிகள் இல்லாத தற்போதைய நிலையில் பிரேரிக்கப்பட்ட திட்டப்படி எண்ணெய்க் குதங்களைக் குத்தகைக்கு விடும் எந்த நடவடிக்கையையும் நாம் எதிர்ப்போம் என்று வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டாமென அரசிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.