Header image alt text

jaliya-wickramasuriyaஐக்கிய அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜாலிய விக்கிரமசூரிய கடந்த நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோது நிதி குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இலங்கை தூதரகத்துக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட பணத்தில் 66 இலட்சம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

sfdமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள களுதாவளை கடற்கரையில் விமானமொன்றின் பாகம் கரையொதுங்கியுள்ளது. இன்று காலை 7.30 அளவில் மேற்படி விமான பாகம் கரையொதுங்கியதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார்.

விமானத்தின் இறக்கை பகுதி ஒன்றே கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கடற்படையினருக்கும், விமானப் படையினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் களுதாவளை கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். கரையொதுங்கியுள்ள விமானத்தின் பாகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார். Read more

mavai_mp_002மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச செயலகத்தில், புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா, மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில், “எங்களுடைய மக்கள் மாற்றத்தை விரும்பி, ஓர் ஆட்சியை அமைத்திருக்கின்றார்கள். இதேவேளை, தமிழ் பிரதேசங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கின்றார்கள். Read more

ban ki moonஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரான பான் கீ முன், பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதுடன், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். Read more

sfdfdவவுனியா பரநாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் இன்று காலைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியை மீட்டுத் தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த திங்கட்கிழமை (19) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார் (38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். Read more