Header image alt text

dffdதொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதமாகியுள்ளது. 

இன்று காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, வீடொன்றில் இருந்து பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், அப் பகுதி மக்களின் உதவியால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட சில வீடுகளில் இருந்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. Read more


img_0382
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனையின் புகழ் பூத்த முதுபெரும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு 23.12.2016 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து வன்னி மேம்பாட்டுப்பேரவை மற்றும் கலாசாரப் பேரவையின் அனுசரணையில் தமிழ் கலாசார மன்றத்தின் (சுக்காட் ஜேர்மனி) நிதிப்பங்களிப்புடன் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் க. தவராஜா, இணைத்தலைவர் கமலகாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

former-ltteவவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more

russia-flightசுமார் 92 பயணிகளுடன் காணாமற்போன ரஷ்ய விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த விமான பயணத்தை ஆரம்பித்து 20 நிமிடங்களின் பின்னர் விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமானம் உடைந்து வீழ்ந்தபோது அதில், இராணுவ வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 91பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

housing schmeகிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் பதினையாயிரத்து 370வரையான புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களினூடாக நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலும் பதினையாயிரத்து 370 வரையான குடும்பங்கள் நிரந்தரவீடுகள் இன்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில், இதுவரை பல்வேறு திட்டங்களினூடாக இருபத்தி ஆறாயிரத்து 261 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டும் நிர்மானம் செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கின்றதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

armsவவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் புலிகளினால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பொலிஸ், விசேட செயலணிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மிதிவெடிகள்-49, 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் -82 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

mahinda-desapriyaசொத்து விபரங்கள் பற்றிய ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30ம் திகதி சொத்து விபரங்களை வழங்காத அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ம் திகதி கூடி இது குறித்து விசேட ஆய்வுகளை நடத்த உள்ளனர். ஆய்வுகளின் பின்னர் சொத்து விபரங்களை வழங்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more

nalliah_kumaraguruparanவடமாகாண சபை அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நிராகரித்தமை யதார்த்தமானதே என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பணிக்குழுவின் பொது செயலாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

13 என்றும் ஒற்றையாடைசிக்குள்ளேனும் சமஷ்டிக்கிணையான அதிகார பரவலாக்கலை, கூடுதலான அதிகார பரவலாக்கலை எதிர்பார்த்தும் புதிய அரசியலமைப்பில் எதிர்பார்த்து இருக்கையில் மாகாண சபைகளின் அதிகாரத்தை கூறுபோடுவதாக அமையும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நிராகரித்தமை யதார்த்தமானதே. இச்சட்டமூலம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமது தெளிவான எதிர்ப்பையோ அல்லது தம் நிலைபாட்டையோ பகிரங்கமாக தெரிவித்தாக வேண்டும். Read more