முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனையின் புகழ் பூத்த முதுபெரும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு 23.12.2016 வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து வன்னி மேம்பாட்டுப்பேரவை மற்றும் கலாசாரப் பேரவையின் அனுசரணையில் தமிழ் கலாசார மன்றத்தின் (சுக்காட் ஜேர்மனி) நிதிப்பங்களிப்புடன் சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், பிரதேச செயலாளர் குணபாலன் வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் க. தவராஜா, இணைத்தலைவர் கமலகாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.