nalliah_kumaraguruparanவடமாகாண சபை அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நிராகரித்தமை யதார்த்தமானதே என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பணிக்குழுவின் பொது செயலாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

13 என்றும் ஒற்றையாடைசிக்குள்ளேனும் சமஷ்டிக்கிணையான அதிகார பரவலாக்கலை, கூடுதலான அதிகார பரவலாக்கலை எதிர்பார்த்தும் புதிய அரசியலமைப்பில் எதிர்பார்த்து இருக்கையில் மாகாண சபைகளின் அதிகாரத்தை கூறுபோடுவதாக அமையும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நிராகரித்தமை யதார்த்தமானதே. இச்சட்டமூலம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமது தெளிவான எதிர்ப்பையோ அல்லது தம் நிலைபாட்டையோ பகிரங்கமாக தெரிவித்தாக வேண்டும். அதுதான் அரசியல் நேர்மை. இந்த விடயத்தில் சாணக்கியம் எனும் மகுடி வாரத்தைக்கு இடமிருக்க முடியாது. இந்த விடயத்தில் சாணக்கியம் எனும் மகுடி வாரத்தைக்கு இடமிருக்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொது செயலாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டம் மாகாண சபைகளின் அதிகாரத்தை கூறுபோடுவதாக அமையும் எனும் யதார்த்தம் தான் வடமாகாண, வட மத்திய மாகாண, ஊவா மாகாண சபை கள் மேற்படி சட்டமூலத்தை நிராகரிக்க வைத்தது என்பதுதான் உண்மை என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.