russia-flightசுமார் 92 பயணிகளுடன் காணாமற்போன ரஷ்ய விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த விமான பயணத்தை ஆரம்பித்து 20 நிமிடங்களின் பின்னர் விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமானம் உடைந்து வீழ்ந்தபோது அதில், இராணுவ வீரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 91பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் சோஷி நகரிலிருந்து சிரியா நோக்கி பயணித்த விமானமொன்றே இவ்வாறு கடலில் வீழ்ந்து நொறுங்கியதாக அறிவிக்கப்ட்டுள்ளது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதில் இவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் கருங்கடலில் மூழ்கி காணாமற் போனவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.