Header image alt text

26-12-82004ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூறும் 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு முள்ளியவளை (கற்பூரப்புல்வெளி) கயட்டையில் இன்று 26.12.2016 பிற்பகல் 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

மேற்படி சுனாமி நினைவேந்தல் நிகழ்வானது கயட்டை பிரதேசத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களை நல்லடக்கம் செய்த இடத்தில் வனியா மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நினைவஞ்சலி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர், ஐங்கரநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more

img_0130வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் பெருமையுடன் நடாத்திய இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும், வெற்றிபெற்றவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (25.12.2016) கழகத்தின் தலைவர் திரு க.சிம்சுபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு. அஜித் சந்திரசேன, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழக செயலாளருமான திரு ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சு.காண்டீபன், கழகத்தின் பிரதி தலைவர் திரு வி.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். Read more

26-12-1வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் இன்று(26.12.2016) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் செம்மலைiயில் நினைவுகூரப்பட்டது. வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. Read more

jailபொலிஸ் காவலில் இருக்கும் நபர்கள் மரணமடைவது, சித்திரவதைகளுக்கு உள்ளாகுவது தொடர்பில் விசேட விசாரணைப்பிரிவொன்றை அமைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த நபர்கள் மரணமடைந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார் அவ்வாறான சம்பவங்கள் பலவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

asassaaசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு. எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.00மணிவரை சுவிஸ்லாந்தின்  “Treffpunkt Wittikofen”  upiterstr-15, 3015 Bern என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான. திரு. இலக்ஸ்மன் இளங்கோவன் (வட மாகாண சபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான, திரு. பொன். சுந்தரலிங்கம் (சங்கீத பூசணம், இன்னிசை வேந்தர்), புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு சிறீகணேச மகாவித்தியாலயம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்) ஆகியோரும், Read more

swordயாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றுமாலை இடம்பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த இளைஞரான வின்சன், ஆட்டோ சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். Read more

dsfsdfsdஇலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்தின் அடுத்த இரண்டு வருட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக நோர்வே அரசு 10.5 மில்லியன் ரூபா தொகையை வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத் தலைவர் குமார் நடேசன் ஆகிய இருவராலும் சமீபத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகளால் நிர்வாகிக்கப்படும் இந்த இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்திற்கு நோர்வே அரசை விட சுவீடன், டென்மார்க் அரசுகள், அமெரிக்க, பிரித்தானிய அரசுகள், யுனெஸ்கோ அமைப்பு என்பன நீண்ட காலமாக நிதி உதவி அளித்து வருகின்றன. Read more

pujitha jayasundaraஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கவில்லையென பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவது தொடர்பில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவித ஏற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தனியார் ஊடகங்களுக்கு செய்தி வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

jafயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சரிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் இன்றுமாலை 3.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நேரம் வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. கடந்த ஒருவாரமாக இந்த கோபுரத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இன்றைய தினமும் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதிய உணவுக்காக திருத்தவேலைகள் மேற்கொண்ட நபர்கள் சென்றபின்னர் குறித்த கோபுரம் சரிந்து விழுந்துள்ளது. Read more

abilash“சுனாமி பேபி 81“என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.

ஆழிப் பேரலையின்போது ஒன்பது தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் சுனாமி இடம்பெற்று 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர். கல்முனை குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஜெயராசா அபிலாஷ_க்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. Read more