dsfsdfsdஇலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்தின் அடுத்த இரண்டு வருட நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக நோர்வே அரசு 10.5 மில்லியன் ரூபா தொகையை வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத் தலைவர் குமார் நடேசன் ஆகிய இருவராலும் சமீபத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சங்கம் உட்பட பல அமைப்புகளால் நிர்வாகிக்கப்படும் இந்த இலங்கைப் பத்திரிகையாளர் நிறுவனத்திற்கு நோர்வே அரசை விட சுவீடன், டென்மார்க் அரசுகள், அமெரிக்க, பிரித்தானிய அரசுகள், யுனெஸ்கோ அமைப்பு என்பன நீண்ட காலமாக நிதி உதவி அளித்து வருகின்றன. வெளியாகியுள்ள செய்திகளின்படி, அளிக்கப்பட்டுள்ள பண உதவி குறிப்பாக தகவல் உரிமை சட்டமூலத்தினூடாக பேச்சு சுதந்திரத்தை உருவாக்கவும், பத்திரிகையாளர்களிடையே தொழில் நிபுணத்துவத்தை உருவாக்கவும் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.