சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு. எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.00மணிவரை சுவிஸ்லாந்தின் “Treffpunkt Wittikofen” upiterstr-15, 3015 Bern என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான. திரு. இலக்ஸ்மன் இளங்கோவன் (வட மாகாண சபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக ஆர்வலருமான, திரு. பொன். சுந்தரலிங்கம் (சங்கீத பூசணம், இன்னிசை வேந்தர்), புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு சிறீகணேச மகாவித்தியாலயம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், சமூக சேவகருமான, திரு. சண்முகலிங்கம் சதாசிவம் (கிளி மாஸ்டர்) (முன்னாள் அதிபர் – புங்குடுதீவு சிறீ கணேச மகாவித்தியாலயம்) ஆகியோருடன்; பல ஒன்றியங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கேற்கின்றனர்.