26-12-1வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் இன்று(26.12.2016) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் செம்மலைiயில் நினைவுகூரப்பட்டது. வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன. 26-12-2 26-12-326-12-426-12-926-12-826-12-6