வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் பெருமையுடன் நடாத்திய இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும், வெற்றிபெற்றவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (25.12.2016) கழகத்தின் தலைவர் திரு க.சிம்சுபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு. அஜித் சந்திரசேன, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழக செயலாளருமான திரு ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சு.காண்டீபன், கழகத்தின் பிரதி தலைவர் திரு வி.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.