Header image alt text

ratnasri-wickramanaikeஇலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

1933ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி பிறந்த அவர் தனது 83ஆவது வயதில் இன்று காலமானார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராக ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு நாளையதினம் பாராளுமன்றத்தில் விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. Read more

sivasakthi ananthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாதாமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இக் காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
Read more

mullaitiveமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்து 259 மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 567 பேரும் பதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 707 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 பேரும் துணுக்காய் பிரதேச செயாளர் பிரிவில் 282 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 317 பேரும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 75 பேரும் என்று இரண்டாயிரத்து 259 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் போரினால் பாதிக்கப்பட்டு உடல் அபயங்களை இழந்தவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் குடும்ப தலைவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

drawnயாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் நீரில் மூழ்கி பலியானார்.

யாழ். இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார். இதேவேளை யாழ். கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி, அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

diplomatic-passportஇந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதிக்குள், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால், 423,066 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 132,705 கடவுச்சீட்டுக்களும் மற்றைய நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்கள் 269,647 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 283 புதிய இராஜதந்திர கடவுச்சீட்டுக்களும் முதல் 9 மாத காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 54,761 கடவுச்சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேகாலப் பகுதிக்குள், 64,698 வெளிநாட்டவருக்கு, புதிய இலங்கை விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pakkiyasothiநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. அதே நாளில் இந்த அறிக்கை, இணையத்தளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கல ந்தாய்வுச் செயலணியின் செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

தமது செயலணி பல்வேறு சமூகங்களுடன் நடத்திய நேர்காணல்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள், குழுநிலை விவாதங்கள், மூலம், 7500 யோசனைகளைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனைகளின் அடிப்படைகள் தமது அறிக்கையில் உள்ளப்படக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். Read more

sasassaவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. Read more