வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கனடா கிளையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை இழந்த தந்யை இழந்த மற்றும் தாயை இழந்த என 40 ஆண்களும் 150 பெண்களுமாக 190 சிறார்கள் பராமரிக்கபட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்ல நிர்வாகத்தினால் கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.