1fசிவசுயந்தனின் இசையில் ஐயப்பன் புகழ்பரப்பும் சபரிசகானம் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா 26.12.2016 திங்கட்கிழமை பிற்பகல் 4மணியளவில் சிறுவிளான் சிறீ மெய்கண்டன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சி.றமணராஜா (விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். திரு. க.சிவகுமார் (பிரபல இரசாயனவியல் ஆசிரியர்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையினை பிரம்மஸ்ரீ பாலஸ்கந்தக் குருக்கள் அவர்களும், வாழ்த்துரையினை ஆசிரியர் கலாவித்தகர் கி.அனந்தகோபன் அவர்களும் வழங்கினார்கள். நிகழ்வின்போது முதற் பிரதியினை விரிவுரையாளர் சி.றமணராஜா அவர்கள் வெளியிட்டு வைக்க பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

1a 1b 1c 1d 1e 1g