Header image alt text

2hயாழ். நல்லூர் ஸ்ரீநடராஜ பரமேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஐயப்பனின் மகரஜோதி மண்டல பூஜை 27.12.2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00மணியளவில் நடைபெற்றது. இதன்போது தும்பளை கிழக்கு ரிதம்ஸ் குழுவினரின் தயாரிப்பில் உருவான சபரிச அரிகர சுதன் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆசியுரையினை குருசாமி கரிகரன் சிவாச்சாரியார் அவர்கள் வழங்கினார். திரு.கே.கேதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

swaminathanயுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச்மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 4600ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள் வரை இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இவர்களை மீள்குடியேற்ற காணிகளை பெற்றுக் கொடுப்பது குறித்து தற்போது வரை பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

jailபேஸ்புக் வலைத்தலத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பதிவு பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது கட்டாரில் இருந்து எனவும், மேலும் சில நாடுகளில் இருந்தும் சில நபர்கள் சம்பந்தப்பட்ட பதிவினை பேஸ்புக்கில் இணைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read more

kachchativeவருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்துள்ளார்.

சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை, இந்திய பக்தர்கள் வருவது வழமை. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. Read more

sasikalaஅண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதற்கு கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வி.கே.சசிகலாவிடம் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்து இணக்கம் தெரிவித்தனர். சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியளிப்பதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானத்தை கண்ணீர் மல்க ஏற்றுக் கொண்ட சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளாரென ஓ.பன்னீர் செல்வம் ஊடகத்தினரிடம தெரிவித்துள்ளார். Read more

vimalதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இன்றுகாலை 10.00 மணியளவில் அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவங்ச பதவி வகித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை தமது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். Read more

musammilஇலங்கைக்கான மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஏ.ஜே.எம். முஸாமில் பெப்ரவரி மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கமைய 2017.02.02ம் திகதி முதல் அவர் அப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகராக இதுவரை ஐ.அன்சார் பதவி வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

panneerchelvamகச்சத்தீவை மீட்க இலங்கையுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரை படிக்கப்பட்டது.

கேரளா திருவனந்தபுரத்தில் 27வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பன்னீர்செல்வத்தின் உரையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜெயலலிதாவின் மறைவுக்கு உங்களில் பலர் வருத்தமும், ஆறுதலும் தெரிவித்து இருந்தனர். அதற்கு நன்றி. பாக்கு நீரிணைப் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். Read more

battiமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சட்டவிரோத மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஆண்டில் குறித்த மதுபான சாலைகளின் அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாடசாலைகள் ஆலயங்கள் பொதுச்சந்தை இவைகளுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதுடன் வீதி விபத்துக்களும் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.