கச்சத்தீவை மீட்க இலங்கையுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரை படிக்கப்பட்டது.
கேரளா திருவனந்தபுரத்தில் 27வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பன்னீர்செல்வத்தின் உரையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜெயலலிதாவின் மறைவுக்கு உங்களில் பலர் வருத்தமும், ஆறுதலும் தெரிவித்து இருந்தனர். அதற்கு நன்றி. பாக்கு நீரிணைப் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழக மீனவர்களையும் 114 படகுகள் மற்றும் உபகரணங்களையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்க 1974ம் ஆண்டு இலங்கையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.