யாழ். நல்லூர் ஸ்ரீநடராஜ பரமேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஐயப்பனின் மகரஜோதி மண்டல பூஜை 27.12.2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00மணியளவில் நடைபெற்றது. இதன்போது தும்பளை கிழக்கு ரிதம்ஸ் குழுவினரின் தயாரிப்பில் உருவான சபரிச அரிகர சுதன் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆசியுரையினை குருசாமி கரிகரன் சிவாச்சாரியார் அவர்கள் வழங்கினார். திரு.கே.கேதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது ஐயப்ப சுவாமி யாழ். நல்லூர் ஸ்ரீநடராஜ பரமேஸ்வரி கல்யாண மண்டபத்திலிருந்து யானையில் ஊர்வலமாக கோண்டாவில் ஐயப்பசாமி கோவிலுக்கு சென்றார். மேற்படி ஐயப்பன் பாடல் இறுவெட்டினை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் பெருந்தொகையான குருசாமிமார்களும், மேலும் சாமிமார்களும் கலந்துகொண்டார்கள்.