sdfd“காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாகவுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம், மாலை 4மணிவரை இடம்பெறவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் பொங்கலுக்கு பின்னராக காலத்தில் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில் “எங்கே எங்கே எங்கள் பிள்ளைகள் எங்கே?, அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா வீடு தீரும்புவார்களா?, மைத்திரி – ரணில் கூட்டின் பங்காளிகளாக மாறியதன் பலன் என்ன” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தனர்.