இன்றைய தினம் எமது புலம் பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த சங்கீதா அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக இரண்டு மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக துவிசக்கர வண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.
மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் துவிசக்கரவண்டிகள் இல்லாது சிரமப்படுவதாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மேற்படிதுவிசக்கரவண்டிகள் இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்க தலைமைச் செயலகத்தில் வைத்து சழூகநற்சிந்தனையாளனும் ஓய்வு பெற்ற நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தரும்மான திரு.சி.சபாநாதன் அவர்களால் மானிப்பாய் மகளீர் கல்லூரி மாணவி ச.வைஸ்னவி மற்றும் வட்க்கோட்டை மத்திய கல்லூரி மாணவன் கார்த்திகன் ஆகியோருக்கு துவிசக்கரவண்டிகள் வழங்கி வைக்கபட்டுள்ளன.
இன்றைய தினம் இக் கைங்கரியத்தை ஆற்றியுள்ள சங்கீதா அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளி மாணவர்களின் குடும்பங்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.