Header image alt text

musammilஇலங்கைக்கான மலேஷியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஏ.ஜே.எம். முஸாமில் பெப்ரவரி மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கமைய 2017.02.02ம் திகதி முதல் அவர் அப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகராக இதுவரை ஐ.அன்சார் பதவி வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

panneerchelvamகச்சத்தீவை மீட்க இலங்கையுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரை படிக்கப்பட்டது.

கேரளா திருவனந்தபுரத்தில் 27வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பன்னீர்செல்வத்தின் உரையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜெயலலிதாவின் மறைவுக்கு உங்களில் பலர் வருத்தமும், ஆறுதலும் தெரிவித்து இருந்தனர். அதற்கு நன்றி. பாக்கு நீரிணைப் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். Read more

battiமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சட்டவிரோத மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஆண்டில் குறித்த மதுபான சாலைகளின் அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கக்கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாடசாலைகள் ஆலயங்கள் பொதுச்சந்தை இவைகளுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைகளால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதுடன் வீதி விபத்துக்களும் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

1fசிவசுயந்தனின் இசையில் ஐயப்பன் புகழ்பரப்பும் சபரிசகானம் ஐயப்பன் பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா 26.12.2016 திங்கட்கிழமை பிற்பகல் 4மணியளவில் சிறுவிளான் சிறீ மெய்கண்டன் தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சி.றமணராஜா (விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

sensolai-02வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கனடா கிளையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை இழந்த தந்யை இழந்த மற்றும் தாயை இழந்த என 40 ஆண்களும் 150 பெண்களுமாக 190 சிறார்கள் பராமரிக்கபட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்ல நிர்வாகத்தினால் கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. Read more

sdddddfமுல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்றுகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த சூரிப்பிள்ளை கந்தப்பிள்ளை (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து விபத்தினை ஏற்படுத்திய இராணுவ அம்புலன்ஸ் வண்டியை உடனடியாக இராணுவத்தினரால் அகற்றப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். Read more

barathi-1எமது புலம்பெயர் உறவான டுபாய் நாட்டைச் சேர்ந்த திருமதி. சுமதி குணராஜசிங்கம் அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக பாரதி இல்லத்திற்கு ரூபா 100,000 பெறுமதியான உணவு பொருட்களான அரிசி 900முப 95முப சீனி 50 பால்மா பைக்கற் என்பனவற்றை இல்ல களஞ்சியத்திற்க்கு இன்று அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். Read more

vigneswaranவடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு காலப்பகுதி வரையில் வடக்கில் காணிகளைப் பெற்ற 4 ஆயிரத்து 307 குடும்பங்களில், 73 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர். அதேநேரம், 2015ம் ஆண்டு வரையில் 26 ஆயிரத்து 668 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கான விண்ணப்பித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் இதுவரையில் 24 ஆயிரத்து 40 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 2 ஆயிரத்து 801 குடும்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன. அதேநேரம் தெற்கிலும், புத்தளத்திலும் குடியேறியுள்ள பல முஸ்லிம்கள் வடக்கில் மீள்குடியேற விண்ணப்பிக்கவில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ratnasri-wickramanaikeஇலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

1933ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி பிறந்த அவர் தனது 83ஆவது வயதில் இன்று காலமானார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராக ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு நாளையதினம் பாராளுமன்றத்தில் விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. Read more

sivasakthi ananthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாதாமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இக் காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
Read more